SSPFriends கல்லூரி காலங்கள்

வாங்க பழகலாம், நம்முள் பகிர்ந்து கொள்ளலாம்..

-

வணக்கம் நண்பர்களே,
           எனக்கும், இக்கல்லூரிக்கும்( நான் சென்ற ஒரே கல்லூரிகூட )நெருங்கிய உறவு உண்டு .  ஏனெனில் நான் என்னை அறிந்தது, உணர்த்து, கற்றது, பெற்றது பல. அவைகளில் சில உங்கள் பார்வைக்கு...

என்னை பற்றி :
          அட நான்தான் உங்கள் தினி என்கிற தினேஷ்குமார் மணிக்கண்ணன்.  தினி என்பது எட்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரியரால் சுட்டபெற்ற செல்ல, புனை பெயர். என் சொந்த ஊர் வளவனூர், விழுப்புரம்( 10 கிமி )   - பாண்டிச்சேரி( 30 கிமி ) சாலை. பதினோராம் வகுப்பை பாதியில் நிறுத்தி, கல்லூரியில் சேர்த்தேன்..

        என் குடும்ப பின்னணி( தாய் வழயில் )கட்டிட துறையை சேர்த்தவர்களே அதிகம். ஆனால், என் குடும்ப நண்பரின்( மிக்க நன்றி ) பரிந்துரையில் கம்ப்யூட்டர் துறையை தேர்ந்தெடுத்து 2002-2005 batch படித்தேன்.



கலந்தாய்வு கூட்டம் :
         நான் என் பெற்றோடு கலந்தாய்வு கூட்டத்திருக்கு வந்தேன்,  அன்று நான் சந்தித்து என் மனதில் பதிந்தவர்கள் நாகராஜன் - பெளதிகவியல்( physics ) ஆசிரியர்( துபாயில் இவரது தம்பியை, எங்கள் அலுவலக வாடிக்கையாளராக சந்தித்தேன் ) ,  சுரேஷ் - இயந்திரவியல், ரமேஷ் - கம்ப்யூட்டர், சாந்தி - கம்ப்யூட்டர்.  பின்னர் கேள்விபட்டேன் துர்கா - கம்ப்யூட்டர்  அன்று எங்கள் கூட்டத்தில் என்னை பார்த்தார் என்று.....


     முதன்முறையாக வெளியூரில் தங்கி படிக்க போகிறேன் என்கிற பயமும் உண்டு, தாயின் பிறந்த ஊர்தானே என்ற சந்தோசமும் உண்டு..

முதலாம் ஆண்டு :   
         எனக்கு என் தாயின் பிறந்த ஊராம் பாழ்வாய்க்கால், சிதம்பரம்( 18 கிமி ) பிடித்த ஊரு. நான் அங்கு படிக்க ஆசை பட்டதுண்டு..அங்கு தங்கிதான்( முதலாம் ஆண்டு மட்டும் ) டிப்ளோமா படித்தேன்.   என் உயிர் நண்பன் லக்ஷ்மணன்( ஓரத்தூரன் ) நண்பனாக பெற்றேன். நங்கள் இருவரும்  தினமும் 31+31 கிமி சென்று வந்து படித்தோம். நாங்கள் பகிர்ந்து கொண்டது பல.. என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவன். என் சொந்தம் அனைத்தும்  எங்கள் நட்பை நன்கு அறியும்..

         ரூ 1500/- இருந்த செமஸ்டர் கட்டணம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அம்மையாரால் ரூ 3500/- உயர்த்தபெற்றது.  முதல் நாள் முதல் வகுப்பிலே குழப்பம், மின்சாரவியல் தினேஷ்குமார் எங்கள் வகுப்பில் அமர்ந்ததால்..
                  
         பெயர்( பெண்கள் அடுத்து ஆண்கள் ) ஒழுங்கின் படியால், நான் கடைசி பெஞ்சு தாங்க!!  பெஞ்சை பகிர்ந்தவர்கள் பாபு, பாலகுரு, நான் மற்றும் இளம்பரதி. மகிச்சியான சம்பவங்கள் நடந்தேறியது( உபயம் : இளம்பரதி, அலெக்ஸ், அன்புராஜ் ),   எங்களின்  குறும்புகளும் மகிழ்சியானவை..  என் குறும்பால், எங்கள் வகுப்பில் மகாலட்சுமி-தான் மெரிட் டாப்பர்  என கணனி ஆசிரியை உதவியால் அறிந்தேன். அன்று முதல் எல்லா தேர்வு முடிவிலும் மகாலக்ஷ்மியின் மதிப்பெண்ணை தெரிந்து கொள்வேன்( முதலாம் ஆண்டு மட்டும் என்னால் முந்த முடியவில்லை )..

         பனிரெண்டாம் வகுப்பு முடித்து, பத்தாவது மதிப்பெண் வைத்து கல்லூரி சேர்தவர்களும் உண்டு, ஆனால் எந்த பாகுபாடும் இல்லை எங்கள் நண்பர்களிடம்.

         மிகவும் பிடித்த வகுப்பு : கணக்கு-1, நாகராஜன் ஆசிரியர் வகுப்புகள்.
         குறும்பு நிறைந்த வகுப்பு : கெமிஸ்ட்ரி, கட்டிட வரைகலை, கம்ப்யூட்டர்,  சார்லஸ் ஆசிரியர்  வகுப்புகள்.

        மறக்க முடியாத சீனியர் பகடிவதை குறும்பு :
                * சிகரட் வாங்கி கொடுத்தேன், நானாவது பரவாயில்லை லக்ஷ்மன் அவனோட சட்டை கொடுத்து பின் அதற்காக அலைந்தது வேறு..
                * இலை, மண் எண்ணியது.
                * வகுப்புக்கு வந்த சீனியர்கள் நாகராஜன் ஆசிரியரிடம் மாட்டியது, இன்னும் பல.       
           பிடித்த ஆசிரியர்கள் பல, மறதியின் காரணமாக நாகராஜன், சார்லஸ் பெயர் மட்டுமே நினைவில் உள்ளது, மற்றவர்கள் மன்னிக்கவும். என்னை கல்லூரியில் முதன்முதலில் ஊக்கபடுத்தியது நாகராஜன், சார்லஸ் வெகுளியானவர் மற்றும்  தினமும் பாண்டிச்சேரியில் இருந்து வருவார்.

        பார்த்தசாரதிதான் எங்கள் வகுப்பின் தலைவன், மூன்றாமாண்டு வரை.

       ஆங்கில உச்சரிப்பில் எனக்கு ஒரு அலாதி பிரியம், வகுப்பில் மாணவர்களிடம் போட்டி நடத்தியதும் உண்டு, உச்சரிப்பால் ஆசிரியரிடம் பல்பு வாங்கியதும் உண்டு..

      கட்டிட துறை மாணவர்கள், மற்ற துறை மாணவர்களோடு அமர்ந்தனர்,  எங்களுடன் அமர்ந்த கட்டிட துறை மாணவர்கள் சிலர் : சந்தோஷ்,  உதய், பால்ராஜ்...


        எங்கள் மதிய உணவு வட்டமே பெருசு,  நான் பகிர்ந்து உண்டவர்கள் லக்ஷ்மன், மகாராஜா, கிருஷ்ணசுவாமி, மணிவண்ணன், பாபு, ஞானராஜ், பிரபுதாஸ், சமீர், மகேந்திரன், விநேஷ்பாபு, ஜெயகுமார், ராமஜெயம், சம்பத்.  உண்டவுடன் கிரிக்கெட், வாலிபால் விளையாட்டு, இல்லை கடை வீதிக்கு செல்வோம். சில நாட்கள்  10-20 நிமிடம் காலம் தாழ்த்தி வந்ததுகூட உண்டு..

        சில நாட்கள் மாதிரி தேர்வு காரணமாக காலை மட்டும் கல்லூரி நடந்தது உண்டு.. இக்காலங்களில் எனக்கும், லக்ஷ்மனக்கும் ரூ 3/- TIGER BISCUIT பல நாள்  மதிய உணவு, காரணம் 14:00 - 15:30 , சிதம்பரம் - பாழ்வாய்க்கால்  பேருந்து  இல்லாததே காரணம்.

        பல ஆசிரியர் போல அலெக்ஸ், அன்புராஜ், இளம்பரதி நடித்து காட்டுவது மிகவும் பிடித்தது. பகுதிநேர ஆங்கில ஆசிரியர்தான் முதலாமாண்டில் ஹீரோ.. சார்லஸ் ஆசிரியர் வகுப்பு என்றாலே கல கலதான், ஏனெனில் மாணவர்களை எழுப்பி கேள்வி கேட்பார். நான் கொஞ்சம் பதில் கூறி தப்பிப்பது உண்டு..

        கணக்கு-2 ஆசிரியர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடத்துவார், நாகராஜன், கணக்கு-1 ஆசிரியர் நேரெதிர், ஆழகாவும், பொறுமையாகவும் நடத்துவார்..


     முதலாமாண்டில் குமரேசன் பெளதிகவியல்( physics ) செயல்முறை தேர்வு எழுதியது என்றும் மறக்கமுடியாத ஒன்று. நான் முதலாமாண்டில் அரியர் இல்லாமல் தேர்வானேன்( மதிப்பு குறைவுதான் ).     
      

( தொடரும்... )

இப்பதிவுட்டை இங்கும்  என் வாழ்வியல் பயணம் காணலாம்

0 மறுமொழிகள்:

Post a Comment